ADDED : டிச 01, 2024 10:55 AM

ராய்ப்பூர்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுக்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எஸ்.பி., ஷபரீஷ் கூறுகையில், 'வனப்பகுதியில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை வலைவீசி தேடி வருகிறோம்' என்றார்.