உ.பி.,க்கு ஏழு கட்ட தேர்தல்: வாரணாசிக்கு கடைசி கட்டம்
உ.பி.,க்கு ஏழு கட்ட தேர்தல்: வாரணாசிக்கு கடைசி கட்டம்
ADDED : மார் 17, 2024 10:22 PM

லக்னோ: உ,பி.,க்கு ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில் வாரணாசி தொகுதிக்கான தேர்தல் கடைசி கட்டத்தில் நடைபெற உள்ளது.
நாடு முழுவதுக்குமான பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்
அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதற்கட்ட தேர்தல் ஏப்.,19ம் தேதி நடைபெறும். கடைசி கட்டமாக 7 ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ம் தேதி நடைபெறும்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட தேர்தலாக ஏப்.,19 ல் நடைபெறும்.
உ.பி., பீகார் மற்றும் மே.வங்க மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி., மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ., நேரடியாக 52 தொதிகளுக்கும் மேலாக போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.
மாநிலத்தில் சுமார் 15.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 8.17 கோடி பேர் ஆண்கள். 7.17 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 6,638 பேர். மாநிலம் முழுவதும் 92,587 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல் (ஏப்.,19) 8 தொகுதிகள்
2-ம் கட்ட தேர்தல் (ஏப்.,26) 8 தொகுதிகள்
3-ம் கட்ட தேர்தல் (மே.,07) 10 தொகுதிகள்
4-ம் கட்ட தேர்தல் (மே.,13) 13 தொகுதிகள்
5-ம் கட்ட தேர்தல் (மே.,20) 13 தொகுதிகள்
6-ம் கட்ட தேர்தல் (மே.,25) 14 தொகுதிகள்
7-ம் கட்ட தேர்தல் (ஜூன்.,01) 13 தொகுதிகள்
மாநிலத்தில் பிரதமர் போட்டியிடும் தொகுதியான வாரணாசி தொகுதி கடைசி கட்டமான 7-வது கட்ட தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் மாநில முதல்வர் யோகியின் சட்டசபைதொகுதி அடங்கிய கோரக்பூர் தொகுதியும் கடைசி கட்ட தேர்தலில் தேதியில் இடம்பெற்றுள்ளது.

