பல ஆயிரம் கோடி முறைகேடு; எடியூரப்பா மீது எத்னால் 'பகீர்'
பல ஆயிரம் கோடி முறைகேடு; எடியூரப்பா மீது எத்னால் 'பகீர்'
ADDED : நவ 01, 2024 11:22 PM

விஜயபுரா; ''எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார்,''என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடாபாட்டீல் எத்னால் பகீர்குற்றச்சாட்டு கூறிஉள்ளார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என்னை யாரும்ஹீரோவாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. விஜயபுரா மக்களும்,கர்நாடக மக்களும் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கர்நாடக பா.ஜ., 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் எடியூரப்பாவின் புகழைமட்டுமே பாடுகின்றனர்.
இதனால் பி.ஜே.பி., கர்நாடகா என்ற எக்ஸ் வலைதள கணக்கின் பெயரை, பி.ஒய்., விஜயேந்திரா எக்ஸ்வலைதள கணக்கு என்று மாற்றிக் கொள்ளலாம்.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார். இதனால் ஊழல் செய்யும் அவரது அமைச்சரவையில் இடம் பெற எனக்கு விருப்பமில்லை.
எடியூரப்பாவும், விஜயேந்திராவும் டில்லி செல்லும் போதெல்லாம் என் மீது நட்டாவிடம் புகார் செய்கின்றனர். என்னை கட்சியிலிருந்து நீக்கவும் அழுத்தம் கொடுக்கின்றனர். காங்கிரஸ் அரசால் ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.
இன்னும் ஆறு மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இருக்காது.
போக்குவரத்து துறை லாபத்தில் இயங்குவதாக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பொய் சொல்கிறார்.
மாநிலத்தின் நிதி நிலைமையை பார்த்து, புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
வக்பு வாரியத்தால் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. மடங்கள், கோவில்கள் சொத்துக்களை வக்பு வாரியம் ஆக்கிரமித்துள்ளது.
இதனால் வக்பு வாரிய சொத்துகளை தேசிய பொக்கிஷமாக அறிவிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர்கூறினார்.