மேற்குவங்க கவர்னர் ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார்
மேற்குவங்க கவர்னர் ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார்
UPDATED : மே 03, 2024 11:06 AM
ADDED : மே 02, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா:கவர்னர் மாளிகை ஒப்பந்த பெண் தொழிலாளியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக மே,வங்க கவர்னர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மேற்குவங்க மாநில கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார். இவர் மீது கவர்னர் மாளிகை ஒப்பந்த பெண் தொழிலாளி பாலியல் புகார் கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துகவர்னர் ஆனந்த போஸ் கூறியது, என்னை களங்கப்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேட சிலர் முற்சிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.ஊழல், மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது. வாய்மையே வெல்லும். இவ்வாறு கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.

