UPDATED : ஜன 26, 2025 05:45 PM
ADDED : ஜன 26, 2025 10:25 AM

திருவனந்தபுரம்: விக்ரம், அசின் நடித்த மஜா படத்தின் இயக்குநர் ஷாபி கொச்சியில் இன்று (ஜன.,26) காலை காலமானார். அவருக்கு வயது 56.
இவர் நேற்று, மூளையில் ரத்தக் கசிவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். 1995ம் ஆண்டு 'ஆதியத்தே கண்மணி' மலையாள திரையுலகுக்கு அறிமுகமானார் ஷாபி. கடந்த 2001ம் ஆண்டு 'ஒன் மேன் ஷோ' திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷாபி.
அவர் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில், கல்யாணராமன் (2002), புலிவல் கல்யாணம் (2003), தொம்மனும் மக்களும் (2005), மாயாவி (2007), சட்டம்பிநாடு (2009) மற்றும் டூ கன்ட்ரீஸ் (2015) ஆகிய படங்கள் அடங்கும்.
நகைச்சுவை மற்றும் படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற ஷாபியின் படங்கள் கேரளா திரையுலகில் வெற்றி நடைபோட்டு வந்தது. இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரது இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

