பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்: கெஜ்ரிவால் ஆவேசம்
பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்: கெஜ்ரிவால் ஆவேசம்
UPDATED : ஜன 07, 2024 05:42 PM
ADDED : ஜன 07, 2024 05:33 PM

ஆமதாபாத்: குஜராத் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., சைத்ரா வசவா மற்றும் அவரது மனைவியை கைது செய்தது பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத் சென்றார். சமீபத்தில், நர்மதா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளை மிரட்டியதாக கூறி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., சைதர் வாசவா மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவதாவது: குஜராத் முழுவதும் பா.ஜ., யாருக்காவது பயந்தால் அது எம்.எல்.ஏ., சைத்ரா வசவாக்கு தான். வரும் காலங்களில் சைத்ரா வாசவா பா.ஜ.,வுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். எம்.எல்.ஏ., சைத்ரா வசவா மற்றும் அவரது மனைவியை கைது செய்தது பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்.
பா.ஜ.,வில் இணைந்தால் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என சைத்ரா வாசவாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பாரூச் தொகுதியில் சைத்ரா வாசவா போட்டியிடுவார் என இன்று அறிவிக்கிறேன். நாளை சிறையில் உள்ள சைத்ரா வாசவாவை சந்திக்க உள்ளேன். கொள்ளையர்களை விட பாஜகவினர் மோசமானவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.