
காசாவில் பொதுமக்களை பாதுகாக்கவும், மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்தவும், ஐ.நா., தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த மத்திய அரசின் முடிவு வெட்கக்கேடானது; மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது நம் காலனித்துவ எதிர்ப்பு மரபின் தலைகீழ் மாற்றம்.
பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்.,
போலி செய்திகளின் ஆலை!
காசா விவகாரத்தில் ஐ.நா., தீர்மானத்துக்கு ஆதரவாக நம் நாடு ஓட்டளிக்கவில்லை என, தவறான தகவல்களை காங்., பரப்புகிறது. கடந்த காலத்தின் நடைமுறைகளையே மத்திய அரசு கடைப்பிடித்தது. போலி செய்திகளின் தொழிற்சாலையாக, காங்., மாறி விட்டது.
பிரதீப் பண்டாரி, தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
அவமதிப்பு செய்துள்ளார்!
சட்ட மேதை அம்பேத்கரின் உருவப்படத்தை காலடியில் வைத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவமதிப்பு செய்துள்ளார். தலித்துகளை அவர் இழிவாக நடத்துகிறார் என்பதற்கு இதுவே சான்று. கடவுள்களின் படங்களை கூட, காலடியில் லாலு பிரசாத் வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
சாம்ராட் சவுத்ரி, பீஹார் துணை முதல்வர், பா.ஜ.,