
நம் தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயரை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வெட்கக்கேடானது. எங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தி வரும், 'கர்மஸ்ரீ ' திட்டத்திற்கு காந்தியின் பெயரை சூட்டுவோம்.
- மம்தா பானர்ஜி, மே.வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
ஜனநாயகத்திற்கு அவமானம்!
பார்லி.,யில், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா மீதான விவாதத்தில், ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்திவிட்டன; மரபுகளை சிதைத்துவிட்டன. அவர்கள், பெயரில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், நாங்கள் பணியில் கவனம் செலுத்துகிறோம்.
- சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஏமாற்றாதீர்கள்!
குளிர் காலத்தி ல், வட மாநிலங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை பி.சி.சி.ஐ., தவிர்க்க வேண்டும். அங்கு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து, ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். இக்காலக்கட்டங்களில், கேரளா மற்றும் இதர தென் மாநிலங்கள் போட்டிகளை நடத்த ஏதுவாக இருக்கும்.
- சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

