ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பிரதமருக்கு சீனா அழைப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பிரதமருக்கு சீனா அழைப்பு
ADDED : ஆக 08, 2025 06:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. அவரை வரவேற்பதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆக.,31 மற்றும் செப்.,1 ஆகிய நாட்களில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இத தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குயோ ஜியாகுன் கூறியதாவது: இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடியை அழைக்கிறோம். அவரை வரவேற்கிறேன். அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பலனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மூலம் வளர்ச்சி இந்த அமைப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

