சரிந்தது சரத் பவார் செல்வாக்கு: கண்ணீர் வரவழைத்த கடைசி தேர்தல்!
சரிந்தது சரத் பவார் செல்வாக்கு: கண்ணீர் வரவழைத்த கடைசி தேர்தல்!
UPDATED : நவ 23, 2024 03:38 PM
ADDED : நவ 23, 2024 03:34 PM

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் 6 தசாப்தங்களாக இருக்கும் சரத்பவாருக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் அவரது கட்சி இந்த முறை குறைந்த ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்து உள்ளது.
தற்போது 83 வயதாகும் சரத்பவார், இந்த தேர்தல் தான் தனக்கு கடைசித் தேர்தல் என பிரசாரத்தின் போது உருக்கமாக பேசினார். கட்சியில் முக்கியமான பொறுப்பு வழங்கிய போதிலும், அவரது அண்ணன் மகனான அஜித் பவார் கட்சியை உடைத்தார். இதனால் மனம் உடைந்த அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் லோக்சபா தேர்தலில் அஜித்பவார் தரப்பை விட அதிக தொகுதிகள் கிடைத்தன. இருப்பினும் இந்த சட்டசபை தேர்தல் சரத்பவாருக்கு முக்கியமானதாக இருந்தது. இதன் மூலம் தனது செல்வாக்கை நிரூபக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். இதற்காக வயதை பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கூட்டணியில், சரத்பவார் கட்சி 89 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் சரத்பவாருக்கு எதிர்பாராத விதமான முடிவுகளே கிடைத்தன. 2 மணி நிலவரப்படி அவரது கட்சி 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 14.94 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளது. சரத்பவாரின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறைந்தளவு கிடைத்தது இதுவே முதல்முறையாகும்.
ஆனால், இதற்கு மாறாக, அஜித் பவார் கட்சி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.