எம்.பி.,க்கள் பயணத்தில் நல்ல முடிவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி
எம்.பி.,க்கள் பயணத்தில் நல்ல முடிவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2025 10:06 PM

புதுடில்லி: எம்.பி.,க்களின் வெளிநாட்டு பயணத்தில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம் அனைத்து இடங்களிலும் நல்ல முடிவு கிடைத்தது. இந்தியாவின் நிலைப்பாடு குறித்த முழுமையான புரிதல் இருந்தது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் உள்ள நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துவிட்டு டில்லி திரும்பியுள்ள காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கூறியதாவது: இந்த பயணம் சிறந்தது. அந்த நாடுகள் அளித்த வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். அனைத்து இடங்களிலும் எங்களுக்கு சிறந்த முடிவு கிடைத்தது என்ற நம்பிக்கை உள்ளது. அதிபர்கள், பிரதமர்கள், அறிஞர்கள் என உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நடந்தவற்றை புரிந்து கொண்டு நமக்கு ஆதரவு அளித்தனர். நமது பதிலடியில் நாம் காட்டிய கட்டுப்பாட்டை அறிந்து நமக்கு மரியாதை கொடுத்தனர். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.