கை, கால்கள் இல்லாமல் வில்வித்தை பயிற்சி: 13 வயது சிறுமியின் அசாத்திய வீடியோ வைரல்
கை, கால்கள் இல்லாமல் வில்வித்தை பயிற்சி: 13 வயது சிறுமியின் அசாத்திய வீடியோ வைரல்
ADDED : செப் 09, 2024 05:27 PM

ஜம்மு: காஷ்மீரில் கை, கால்கள் இல்லாத 13 வயது சிறுமி வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரலாகி உள்ளது.
பாரிஸில் நடந்த பாராலிம்பிக் தொடரில், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்து கொண்டார். பிறந்தது முதலே இரு கைகளை இழந்த அவர் தனது கால்கள் மூலமாக வில்வித்தை போட்டியில் சிறப்பாக விளையாடி, பலரின் மனதை இவர் வென்றார்.
தற்போது, ஷீத்தல் தேவி பிறந்த காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில், இன்னொரு 13 வயது சிறுமியும் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பாயல் நாக் என்ற இச்சிறுமிக்கு கைகள் மற்றும் கால்களை இழந்தவர் ஆவார். ஷீத்தல் தேவி போலவே இவரும், அம்பை எய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு,குல்தீப் வித்வான் பயிற்சி அளித்து வருகிறார். இவர் தான் ஷீத்தல் தேவிக்கு பயிற்சி அளித்தவர். சிறுமி பாயல், வில்வித்தை பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ,பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.