தேர்தல் அறிவிக்கட்டும்; அப்போ தெரியும் எங்க அம்மா யாருன்னு: சொல்கிறார் ஹசீனா மகன்!
தேர்தல் அறிவிக்கட்டும்; அப்போ தெரியும் எங்க அம்மா யாருன்னு: சொல்கிறார் ஹசீனா மகன்!
ADDED : ஆக 09, 2024 11:25 AM

டாக்கா: 'வங்க தேசத்தில் புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா நாடு திரும்புவார்' என ஷேக் ஹசீனா மகன் சஜீப் வசத் ஜோய் தெரிவித்தார்.
வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், மாற்றுத்துணி கூட இல்லாமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவருக்கு இந்திய அரசு சார்பில் தகுந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்' என்று அவரது மகன் சஜீப் வசத் ஜோய் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
ஹசீனா மகன் சொல்வது இதுதான்!
தற்போது, ஹசீனா மகன் சஜீப் வசத் ஜோய் கூறியதாவது: புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா நாடு திரும்புவார். அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தற்போதைக்கு அம்மா இந்தியாவில் இருக்கிறார். எனக்கு அரசியல் ஆசை இல்லை. கட்சிக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு நான் இப்போது முன்னணியில் இருக்கிறேன்.
மோடிக்கு நன்றி
பாகிஸ்தான் உளவுத்துறை வங்க தேசத்தில் அமைதியின்மையை தூண்டுகிறது. கடந்த இரண்டு நாட்களில் எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாங்கள் அவர்களை விடமாட்டோம். நிச்சயம் பதிலடி கொடுப்போம். என் தாய்க்கு பாதுகாப்பு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.