மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு 'செக்' தார்வாடில் போட்டியிட ஷெட்டர் விருப்பம்
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு 'செக்' தார்வாடில் போட்டியிட ஷெட்டர் விருப்பம்
ADDED : பிப் 22, 2024 11:10 PM

ராம்நகர்: 'லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என கூறி வந்த பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தற்போது 'தார்வாட் தொகுதியில் போட்டியிடுவேன்' என கூறி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு 'செக்' வைத்துள்ளார்.
ராம்நகர் மாவட்டம், மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், தார்வாடில் போட்டியிட ஆசைப்படுகிறேன். ஆனாலும் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
கடந்த லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. 'பூத்' அளவில் பலமாக்கப்பட்ட கட்சி பா.ஜ.,வாகும்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கனவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஷெட்டருக்கு சீட் கொடுக்காததற்கு, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தான் காரணம் என்று பேச்சு அடிபட்டது.
இதனால் அவர் மீது கோபத்தில் உள்ள ஜெகதீஷ் ஷெட்டர், வேண்டுமென்றே ஜோஷிக்கு 'செக்' வைக்க வேண்டும் என்பதற்காக தார்வாட் தொகுதியை கேட்கிறார்.
ஒருவேளை ஜெகதீஷ் ஷெட்டருக்கு தார்வாட் தொகுதி கொடுத்தால், பிரஹலாத் ஜோஷிக்கு, வேறு பதவி வழங்க வேண்டும்.