ADDED : அக் 25, 2024 07:47 AM

ஹாவேரி: 'ஷிகாவி காங்கிரஸ் வேட்பாளராக யாசிர் அகமதுகான் போட்டியிடுவார்' என்று, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
'இடைத்தேர்தல் நடக்கும் ராம்நகரின் சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளராக யோகேஸ்வர், பல்லாரி சண்டூருக்கு அன்னபூர்ணா, ஹாவேரி ஷிகாவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி மகள் வைஷாலி வேட்பாளர்' என்று, நேற்று முன்தினம் காங்கிரஸ் உத்தேச பட்டியல் வெளியிட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னப்பட்டணா, சண்டூர் வேட்பாளர்கள் பெயர் உறுதியானது. ஆனால் ஷிகாவிக்கு மட்டும் வேட்பாளர் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தொடர்ந்து மூன்று முறை பசவராஜ் பொம்மையிடம் தோற்றுப் போன, சையது அசிம்பீர் கத்ரி, கடந்த சட்டசபை தேர்தலில் தோற்ற யாசிர் அகமதுகான் பதான், வைஷாலி இடையில் போட்டி ஏற்பட்டது.
இறுதியாக நேற்று இரவு யாசிர் அகமதுகான் பதானை வேட்பாளராக, காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் இன்று மனு தாக்கல் செய்கிறார். யோகேஸ்வர், அன்னபூர்ணா நேற்று மனு தாக்கல் செய்தனர்.