ADDED : மார் 05, 2025 05:39 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சிக்லா சுரங்கத்தில் பலகை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
மஹாராஷ்டிராவின் பந்தரா மாவட்டத்தில் மாங்கனீசு தாது எடுக்கப்படும் சிக்லா சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு இன்று ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து சுரங்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சுரங்கப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பலகை திடீரென சரிந்து, தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளி ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், சுரங்கத் தளத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பிடவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.