தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஹிமாச்சலில் மழை,நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஹிமாச்சலில் மழை,நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஹிமாச்சலில் மழை,நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


ADDED : ஜூலை 01, 2025 08:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 08:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் பியாஸ் நதி நிரம்பி வழிகிறது. அதன் காரணமாக கர்சோக், பண்டோஹ், துனாக் மற்றும் தரம்பூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆறுகள், ஓடைகள் நிரம்பியதால், அதனையொட்டிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மெக்லி என்ற கிராமத்தில் மழை, வெள்ளத்தில் 8 வீடுகளும், ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

தரம்பூர் ஆற்றில் நீர்மட்டம் வழக்கத்தை விட கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள சந்தை மற்றும் பஸ் நிலையம் மூழ்கியது.

மாநிலம் முழுவதும் சண்டிகர்-சிம்லா உள்பட என 129க்கும் அதிகமான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பருவமழை மற்றும் அது தொடர்பான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிம்லா-கல்கா பாதை மூடப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாகுபாரியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. சோலன், பிலாஸ்பூர் என தாழ்வான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்டி, சிம்லா, கங்கரா, பிலாஸ்பூர், சோலன், சிர்மர், ஹமிர்புர், உனா, குல்லு, சம்பா ஆகிய 10 மாவட்டங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரம் வரை கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us