சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
UPDATED : ஜன 05, 2024 08:56 PM
ADDED : ஜன 05, 2024 11:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: 15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதியில் கடத்தப்பட்டது. அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்து சென்று 15 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டது.
லைபீரியா கொடியுடன் ‛ எம்வி லிலா நார்போல்க்' என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதி அருகே கடத்தப்பட்டதாக, இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த கடற்படை விமானம் ஒன்று, அந்த கப்பலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், அந்த கப்பலில் உள்ள கேப்டனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.என்.எஸ். சென்னை, கடற்படை வீரர்களுடன் சென்று உரிய நடவடிக்கை எடுத்து கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்களை பத்திரமாக மீட்டது. .