மஹாராஷ்டிரா தேர்தல் விறுவிறு! 45 வேட்பாளர்களை அறிவித்த சிவசேனா
மஹாராஷ்டிரா தேர்தல் விறுவிறு! 45 வேட்பாளர்களை அறிவித்த சிவசேனா
ADDED : அக் 23, 2024 07:28 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை சிவசேனா வெளியிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.,சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சிவசேனா அறிவித்துள்ளது. அதில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பாக்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சாக்ரி தொகுதியில் மஞ்சுளா காவிட், சோப்டா தொகுதியில் சந்திரகாந்த் சோனாவானா, ஜல்கான் தொகுதியில் குலாப்ராவ் பாட்டீல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து கட்சியை கைப்பற்றிய போது ஆதரவு அளித்த சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இம்முறையும் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு அளித்துள்ளார். முன்னதாக, பா.ஜ., 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.