ADDED : பிப் 04, 2026 04:27 AM

தானே, பிப். 4-
மஹாராஷ்டிராவின் தானே மாநகராட்சி மேயராக சிவசேனா கட்சியை சேர்ந்த ஷர்மிளா பிம்ப்லோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவில் நான்கு ஆண்டுக்கு பின் கடந்த மாதம் மும்பை, தானே உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
தானே மாநகராட்சியில் மொத்தமுள்ள, 131 வார்டு உறுப்பினர்களில், 75 இடங்களில் வென்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிகாரத்தை கைப்பற்றியது.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., 28 வார்டுகளை கைப்பற்றியது. இந்நிலையில், தானேயில் நேற்று நடந்த மாநகராட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புதிய மேயராக ஷர்மிளா பிம்ப்லோகர் தேர்வு செய்யப்பட்டார்.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்த இவர், தானே மாநகராட்சியின் 23வது மேயராக நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை மேயராக பா.ஜ.,வை சேர்ந்த கிருஷ்ண பாட்டீல் தேர்வாகியுள்ளார்.

