ஆன்மிகத்தை பரப்ப தனம்மாவை பெற்றெடுத்த சிவன் - பார்வதி
ஆன்மிகத்தை பரப்ப தனம்மாவை பெற்றெடுத்த சிவன் - பார்வதி
ADDED : டிச 10, 2024 07:20 AM

உலகில் ஆன்மிகத்தை பரப்பவும், சிவன் - பார்வதி பூலோகத்துக்கு வந்து, அன்னம்மாதேவியாக பிறப்பித்ததை, இன்று தெரிந்து கொள்வோம்.
நாரதர், சொர்க்கமான கைலாசத்துக்கு சென்று, சிவனை வழிபட்டார். சிவனை பார்த்து, பூலோகத்தில் ஆன்மிகத்தை பரப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவன், பார்வதியை நோக்கி, பூலோகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
பார்வதியோ, 'உங்களை விட்டு என்னால் போக முடியாது. நீங்கள் வருவதாக இருந்தால், நானும் வருகிறேன்' என்றார். இதை ஏற்றுக் கொண்ட சிவனும், பூலோகத்தில் சிரசம்மா - அனந்தார்யா என்ற பெயரில் பிறந்து வளர்ந்து, திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. இதனால், கடவுளை நினைத்து பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தனர். சில நாட்களில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'லிங்க தீட்சை' கொடுத்து, லிங்கம்மா என்று பெயர் சூட்டினர். வளர்ந்து பெரியவள் ஆன பின், பெற்றோரின் அனுமதியின்படி, ஆன்மிகத்தை பரப்ப புறப்பட்டார்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா என பல பகுதிகளுக்கு சென்று ஆன்மிகத்தை பரப்பினார். பசவேஸ்வரர் கல்யாண மண்டபத்திற்கு சென்றார். அங்கு தவம் செய்த போது, அங்கிருந்த மரங்கள், லிங்கம்மாவை நோக்கி வணங்குவது போன்று குனிந்தன.
இதை பார்த்த தோட்டத்தை நிர்வகிப்பர், லிங்கம்மாவுக்கு நைவேத்தியத்தை பிரசாதமாக வழங்கினார்.
அவருக்கு லிங்கம்மா வழங்கிய புற்கள், தங்கம், வைரம், முத்தாக மாறின.
இதையறிந்த பசவேஸ்வரர், கல்யாண மண்டபத்துக்கு வந்தார். லிங்கம்மாவை, 'தனசூர் தனம்மா' என்று அழைத்தார்.
அன்று முதல், லிங்கம்மாவை 'ஸ்ரீ தனம்மா' என்றே பக்தர்கள் அழைக்க துவங்கினர்.
தற்போது இந்த கோவில் மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டம், குட்டாபூரில் அமைந்து உள்ளது. ஆனால் இக்கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி, உலகளின் பல பகுதிகளில் இருந்தும் லிங்காயத்துகள், விஸ்வகர்மா சமுதாயத்தினர் தினமும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ரத உற்சவத்தின் போது, 8 லட்சத்துக்கும் அதிகமான கன்னடர்கள் இங்கு தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் தினமும் அதிகாலை 4:30 முதல் 6:00 மணி வரையும்; 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு 7:00 வரையிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. திங்கட்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு தனம்மா தேவி பல்லக்கு உற்சவம் நடக்கிறது. குறிப்பாக கார்த்திகை மாத அமாவாசையன்று, கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்ய செல்கின்றனர்.
எப்படி செல்வது?
மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையான விஜயபுராவில் இருந்து 32 கி.மீ.,யில் அமைந்துள்ளது. இங்கிருந்து பஸ்சில் செல்லலாம்.
அதுபோன்று, ரயிலில் செல்பவர்கள் குட்டாபூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம்.
பஸ்சில் செல்பவர்கள் பெங்களூரில் இருந்து தட்டாபூர் பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ், ஆட்டோவில் செல்லலாம்.
ஸ்ரீ தனம்மா தேவி கோவில். - நமது நிருபர் -