பிரம்மஸ்ரீ துளசி தாச பிரம்ம வித்யாசிரம மடத்தில் சிவராத்திரி
பிரம்மஸ்ரீ துளசி தாச பிரம்ம வித்யாசிரம மடத்தில் சிவராத்திரி
ADDED : பிப் 29, 2024 11:12 PM
பெங்களூரு: பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள பிரம்மஸ்ரீ துளசி தாச பிரம்ம வித்யாசிரம மடத்தில், வரும் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு ராமசந்திரபுரம் 6வது கிராஸ், ஆஞ்சநேயசுவாமி கோவில் தெருவில், துளசி தாச பிரம்ம வித்யாசிரம மடம் உள்ளது.
இந்த மடத்தில் வரும் 8ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜை; இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜை; 9ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை; காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடக்கிறது.
அதன் பின்னர் அண்ணாமலை, நந்தியெம் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது.
9ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. சிறப்பு விருந்தினராக கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்கிறார்.
சிவராத்திரி விழா ஏற்பாடுகளை, மடத்தின் தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் கங்காதரன், பொது செயலர் ஏழுமலை, துணை செயலர் பேபியம்மாள், உதவி செயலர் துளசி அம்மாள், பொருளாளர் ரவிசந்திரன், கமிட்டி உறுப்பினர்கள் மாலா, மீரம்மாள், நாராயணண் ஆகியோர் செய்து வருகின்றனர்.

