தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கூலித் தொழிலாளியை கொன்ற செருப்பு தைப்பவர் சிக்கினார்

கூலித் தொழிலாளியை கொன்ற செருப்பு தைப்பவர் சிக்கினார்

கூலித் தொழிலாளியை கொன்ற செருப்பு தைப்பவர் சிக்கினார்


UPDATED : அக் 18, 2026 04:20 PM

ADDED : அக் 18, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:20 PM ADDED : அக் 18, 2026 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: தெருவோர கடையில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காத கூலித் தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த, செருப்பு தைக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தென்கிழக்கு டில்லி ஜெய்த்பூர், மீதாபூர் சக்தி விஹாரை சேர்ந்தவர் சந்தீப்ராம்,33. செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர், அதே பகுதியில் சாலையோரத்தில் சிறிய ஹோட்டலும் நடத்தினார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து சாப்பிடும் சந்தீப் குமார்,36, என்பவர், சந்தீப் ராமை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். கடந்த, 15ம் தேதி இரவு வழக்கம் போல சந்தீப்ராம் கடையில், சந்தீப் குமார் சாப்பிட்டார். ஆனால், அதற்கான பணம் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்த சந்தீப் குமார் மீது ஆத்திரத்தில் இருந்த சந்தீப் ராம், குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பினார்.

மறுநாள் காலை, சாலையோர ஹோட்டல் வாசலில் வாலிபர் உடல் கிடப்பது குறித்து தகவல் அறிந்து போலீசார் வந்தனர். உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சந்தீப் ராம் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஜலேசாவில் உள்ள தன் அண்ணன் வீட்டில் பதுங்கியிருந்த சந்தீப் ராமை நேற்று கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us