அவுட்டர் டில்லியில் 'ஜிம்' மீது துப்பாக்கிச்சூடு
அவுட்டர் டில்லியில் 'ஜிம்' மீது துப்பாக்கிச்சூடு
ADDED : ஜன 14, 2026 02:27 AM
புதுடில்லி:அவுட்டர் டில்லி பகுதியில் செயல்படும் உடற்பயிற்சி கூடம் ஒன்று, பணம் தராததால், அந்த உடற்பயிற்சி கூடத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவுட்டர் டில்லியின் பஸ்சிம் விஹார் என்ற இடத்தில், ஆர்.கே.ஜிம் என்ற பெயரில் உடற் பயிற்சி கூடம் ஒன்று செயல்படுகிறது.
தற்போது, அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பஞ்சாப் மாநில தாதா குழுவை சேர்ந்தவர்கள், அந்த ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
அப்போது, பணம் தரவில்லை என்றால், உடற்பயிற்சி கூடம் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டியிருந்தனர். சமூக வலைதளம் வாயிலாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதை அந்த ஜிம் உரிமையாளர் புறக்கணி த்தார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை, அந்த ஜிம் மீது, அடையாளம் தெரியாத மர்ம கும்பல், துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில், அந்த ஜிம்மிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
எனினும், மிரட்டல் விடும் வகையில், அந்த உடற்பயிற்சி கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த போலீசார், அங்கு குவிந்து, தடயங்களை சேகரித்தனர்.
அந்த இடத்தை சுற்றி வளைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

