டில்லியில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
டில்லியில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
UPDATED : செப் 28, 2024 04:05 PM
ADDED : செப் 28, 2024 02:20 PM

புதுடில்லி: டில்லியில் 24 மணி நேரத்தில் 3 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் சம்பவம்
டில்லியின் நரைனா போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள கார் ஷோ ரூமில் புகுந்த மர்ம நபர்கள் சராமரியாக சுட்டனர். இதில் 20 குண்டுகள் பாய்ந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் சில சொகுசு கார்கள் சேதம் அடைந்துள்ளன.
துப்பாக்கிச்சூடு
நடத்தியவர்கள் அங்கிருந்த விற்பனையாளர்களின் மொபைல் போனை பறித்து
வீசியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது சம்பவம்
டில்லி விமான நிலையம் அருகே உள்ள மஹிபல்புர் நகரில் உள்ள ஓட்டலில் இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பைக்கில் வந்த நபர்கள் 6 முறை துப்பாக்கியால் சுட்டதில், இம்ப்ரெஸ் என்ற ஹோட்டலின் கண்ணாடி கதவுகள் சேதமடைந்தன. பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் இச்சம்பவம் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
3வது சம்பவம்
3வதாக இனிப்புக் கடையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பழைய குற்றவாளி ஒருவரின் செருப்பை போலீசார் கண்டறிந்துள்ளனர்.