சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச்சூடு சம்பவம்: முக்கிய குற்றவாளி தற்கொலை ?
சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச்சூடு சம்பவம்: முக்கிய குற்றவாளி தற்கொலை ?
ADDED : மே 01, 2024 09:24 PM

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ் காவலில் இருந்த போது தற்கொலை முயற்சியில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீடு மும்பை பந்த்ராவில் உள்ளது. இவரது வீட்டின் அருகே ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா,24, சாகர்பால் 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வந்த நிலையில் மேலும் சோனு சுபாஷ் சந்தர் , மற்றும் அனுஜ்தபான் 32 என்ற முக்கிய குற்றவாளிகள் கடந்த ஏப். 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அனுஜ் தபான், போலீஸ் காவலில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மும்பை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.