உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 28, 2026 01:00 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி :மேற்கு டில்லி மாவட்டத்தில், முகத்தை மறைத்து, ஹெல்மெட் அணிந்த படி வந்து, கடையில் பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் தேடுகின்றனர்.
மேற்கு டில்லி மாவட்டத்தின் விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்த தீபக் என்பவர், அந்த பகுதியில் கடை ஒன்றை நடத்துகிறார். நேற்று காலையில் கடையை திறந்து வைத்தபடி, அந்த நபர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில், முகத்தை மறைத்து ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காட்டி, கடையில் இருந்த பணம் மற்றும் மொபைல் போனை கொள்ளையடித்து, நிமிடத்தில் அங்கிருந்து தப்பினர்.
அவர்கள் யார்; எங்கிருந்து வந்தனர் என்பது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
