sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

/

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு

4


UPDATED : ஆக 01, 2024 10:51 AM

ADDED : ஆக 01, 2024 09:39 AM

Google News

UPDATED : ஆக 01, 2024 10:51 AM ADDED : ஆக 01, 2024 09:39 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் மொத்தம் 4,465 அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

ஐ.பி.பி.எஸ்., (IBPS) நடத்தும் இந்த பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. முன்னதாக, அக்டோபர் மாதத்தில் ஆன்லைனில் ஆரம்பநிலைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு செப்டம்பரில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சியில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர்/ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதியான வயது

இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அதிகபட்ச வயது வரம்பு, தளர்வு


எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு - 5 வருடங்கள்

ஓ.பி.சி., - 3 வருடங்கள்

மாற்றுத்திறனாளிகள் - 10 வருடங்கள்

தேர்வு கட்டணம்

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆக.,1 முதல் ஆக., 21ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்பிற பிரிவினருக்கு ரூ.850 கட்டணமாக நிர்ணயம்

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.ibps.in/என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். புகைப்படம், கையெழுத்து, இடது கைரேகை, கையால் எழுதப்பட்ட சுயஒப்புதல் சான்று உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்தல் கட்டாயமாகும்.

நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தங்களின் அழைப்பாணையுடன், அசல் சான்றிதழ்களுடன், சொன்ன தேதியில் நேரில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு மையங்கள்

நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது. கூடுதல் விபரங்களை https://www.ibps.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us