'எடியூரப்பா மகன்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமா?'
'எடியூரப்பா மகன்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமா?'
ADDED : மார் 21, 2024 03:21 AM

ஷிவமொகா: “அரசியலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமா?” என, முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷ் கேள்வி எழுப்பினார்.
ஷிவமொகாவில், ஈஸ்வரப்பாவின் இல்லத்தில், நேற்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது தங்களுக்கு கட்சியில் ஏற்பட்ட அநியாயத்தை விவரித்தார்.
அவரது மகன் காந்தேஷ் கூறியதாவது:
என் தந்தைக்கு இத்தனை ஆண்டுகள் அநியாயம் நடக்கவில்லை. இப்போது அநியாயம் நடந்துள்ளது. எடியூரப்பாவின், இரண்டு மகன்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமா; நாங்கள் என்ன செய்தோம்? எங்களுக்கு ஏன் அநியாயம் செய்ய வேண்டும்?
ஷிவமொகாவில் ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஷிவமொகா தொகுதியில், அவருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. எவ்வளவு மனதை கரைத்தாலும், போட்டியில் இருந்து பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
கட்சியை காப்பாற்றப்பட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாகும். இவர்கள் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

