கல்லுாரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் எஸ்.ஐ., - கான்ஸ்டபிள் 'சஸ்பெண்ட்'
கல்லுாரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் எஸ்.ஐ., - கான்ஸ்டபிள் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 04, 2024 11:11 PM

கதக்: கல்லுாரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய, எஸ்.ஐ., - கான்ஸ்டபிள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
கதக் நரேகல் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். லட்சுமேஸ்வரில் தனியார் கல்லுாரியில் படிக்கிறார். தினமும் கல்லுாரிக்கு செல்வதற்காக, நரேகல் போலீஸ் நிலையம் முன், பஸ் ஏறுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நரேகல் போலீஸ் நிலைய எஸ்.ஐ., நிகில் காம்ப்ளே, 35, கல்லுாரி மாணவியிடம் பேச முயன்று உள்ளார். ஆனால், அவருக்கு மாணவி பதில் அளிக்கவில்லை.
இதன்பின், மாணவியின் மொபைல் போன் நம்பரை, யார் மூலமோ நிகில் வாங்கி உள்ளார். தினமும் மாணவிக்கு, 'ஆபாச மெசேஜ்' அனுப்பி உள்ளார். இதுபற்றி அறிந்த நரேகல் போலீஸ் நிலைய கான்ஸ்டபிள் சங்கரும், மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்கள் இருவரிடமும் சென்று, ஆபாச மெசேஜ் அனுப்பினால், எஸ்.பி.,யிடம் புகார் அளிப்பேன்' என்று எச்சரித்து உள்ளார். ஆனால் இருவரும், 'உன்னால் முடிந்ததை பார்த்து கொள்' என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த மாணவி, நேற்று முன்தினம் கதக் எஸ்.பி., நேமகவுடாவை சந்தித்து, எஸ்.ஐ., நிகில், கான்ஸ்டபிள் சங்கர் மீது புகார் அளித்தார். அவர்கள் அனுப்பிய, ஆபாச மெசேஜையும் ஆதாரமாக காட்டினார். இதையடுத்து அவர்கள் இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., நேமகவுடா நேற்று உத்தரவிட்டார்.

