ரூ.2 கோடி லஞ்சம் பெற்று குற்றவாளியை தப்பிக்க வைத்த எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ரூ.2 கோடி லஞ்சம் பெற்று குற்றவாளியை தப்பிக்க வைத்த எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ADDED : நவ 02, 2025 01:09 AM
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முத லீட் டாளர்களிடம், 23 கோடி ரூபாய் மோசடி செய்து கைதான குற்றவாளியை, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று தப்பிக்க விட்ட போலீஸ் எஸ்.ஐ., சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் உப்பளபதி சதீஷ்.
கைது இவர், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, 2019 - 22ல் பல்வேறு முதலீட்டாளர்களிடம், 23 கோடி ரூபாய் மோசடி செய்தார்.
இதில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிவசங்கரின் மகன் டாக்டர் வினய் குமாரிடம் மட்டும், 15.2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த செப்., 18ல் அளித்த புகாரின் பேரில், சதீஷை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஜாமின் கேட்டு சதீஷ் தாக்கல் செய்த மனுவை, கோர்ட் தள்ளுபடி செய்தது.
சதீஷ், அவரது மனைவி, மகள் ஆகியோரை மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாதுக்கு விசாரணைக்காக, அதிரடிப்படை போலீசார் அக்., 24ல் அழைத்து வந்தனர்.
தெலுங்கானாவின் சதாசிவபேட்டை அருகே வந்த போது, போலீசிடம் இருந்து சதீஷ் உள்ளிட்ட மூவரும் தப்பினர்.
சதீஷிடம் இருந்து, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரை தப்பிக்க விட்டதாக அதிரடிப்படை எஸ்.ஐ., ஸ்ரீகாந்த் கவுடா மீது புகார் எழுந்தது.
விசாரணையில், எஸ்.ஐ., கவுடா மற்ற போலீஸ்காரர்களை அனுப்பி விட்டு சதீஷ் இருந்த வாகனத்தை தானே ஓட்டிச் சென்றதும், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் சதீஷ் குடும்பத்தாரை தப்பிக்க செய்ததும் தெரியவந்தது.
தேடும் பணி இந்நிலையில், சதீஷை ஏற்றிச் சென்ற கார் மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் கேட்பாரற்று நின்றிருந்தது. அதை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து, சதீஷிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தப்ப விட்ட எஸ்.ஐ., கவுடாவை சஸ்பெண்ட் செய்து, ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உத்தரவிட்டா ர்.
தொடர்ந்து, சதீஷை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

