sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.800 கோடியில் 'ஒயிட் டாப்பிங்' சாலை 43 பணிகளுக்கு சித்தராமையா அமைச்சரவை அனுமதி

/

ரூ.800 கோடியில் 'ஒயிட் டாப்பிங்' சாலை 43 பணிகளுக்கு சித்தராமையா அமைச்சரவை அனுமதி

ரூ.800 கோடியில் 'ஒயிட் டாப்பிங்' சாலை 43 பணிகளுக்கு சித்தராமையா அமைச்சரவை அனுமதி

ரூ.800 கோடியில் 'ஒயிட் டாப்பிங்' சாலை 43 பணிகளுக்கு சித்தராமையா அமைச்சரவை அனுமதி


ADDED : ஜன 07, 2024 02:46 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு நகர சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், 800 கோடி ரூபாய் செலவில், 'ஒயிட் டாப்பிங்' எனும் சிமென்ட் சாலைகள் அமைக்க, 43 பணிகளுக்கு, கர்நாடகா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகா அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இரண்டரை மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:

m பெங்களூரு நகர சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், 'ஒயிட் டாப்பிங்' எனும் சிமென்ட் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 800 கோடி ரூபாய் செலவில், 43 பணிகளுக்கு அனுமதி

m2023 - 24ம் ஆண்டில், கெஜெடெட் பிரபேஷனரி அதிகாரிகள் நியமனத்தில் வயது வரம்பு தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது பிரிவுக்கு, 35லிருந்து, 38 வயதாகவும்; பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு, 38லிருந்து, 41வயதாகவும்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளுக்கு, 40லிருந்து, 43 வயதாகவும் அதிகபட்ச வயது தளர்த்தப்பட்டுள்ளது

m வன விலங்கு உறுப்புகளை, வனத்துறையிடம் திருப்பி ஒப்படைக்க, 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

m வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் என்ற முடிவுக்கு ஒப்புதல்

m பெங்களூரு பல்கலைக்கழகத்தில், 25 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் தரம் உயர்த்தப்படும்

m மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டுக்கு, 45.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு

mபி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி., கே.கே.ஆர்.டி.சி., என்.டபிள்யூ.ஆர்.டி.சி., ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்கள், பாக்கி வைத்துள்ள 581.47 கோடி ரூபாய் மோட்டார் வாகன வரிக்கு, விலக்கு அளிக்க தீர்மானம்

m எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, கேபினெட் அந்தஸ்துடன் முதல்வரின் அரசியல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, லாபகரமான பதவி என்று கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்யாமல் இருக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வர முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us