சித்தராமையா கூட தலைவர் ஆகலாம் முன்னாள் எம்.பி., சுரேஷ் கிண்டல்
சித்தராமையா கூட தலைவர் ஆகலாம் முன்னாள் எம்.பி., சுரேஷ் கிண்டல்
ADDED : ஜன 09, 2025 06:39 AM

பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா கூட, மாநில காங்கிரஸ் தலைவர் ஆகலாம்,” என, முன்னாள் எம்.பி., சுரேஷ் கிண்டலாக கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பதவி, காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து இங்கு அமர்ந்து கொண்டு விவாதம் செய்வதால், எந்த பயனும் இல்லை. முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம்.
தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர் ஆசைப்படுகின்றனர். சிவகுமாரை தவிர வேறு யாரும் தலைவராகக் கூடாது என்று இல்லை.
முதல்வர் சித்தராமையா கூட கட்சியின் தலைவர் ஆகலாம். கட்சியின் வளர்ச்சியை விரும்புபவர்கள், மக்களின் கஷ்டங்களை அறிந்து கொள்பவர்களை அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. விசேஷ நாட்களில் அமைச்சர்கள் விருது வைப்பது வழக்கம். இதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.
வரும் 2028ல் முதல்வர் ஆவேன் என்று சதீஷ் ஜார்கிஹோளி கூறுகிறார். அவர் மட்டுமல்ல. முதல்வர் பதவி மீது இன்னும் நிறைய பேருக்கு ஆசை உள்ளது.
அடுத்த தேர்தலில் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது நம் பொறுப்பு. அதன் பின், முதல்வர் யார் என்று முடிவு செய்து கொள்ளலாம். கட்சி மேலிடம் கூறினால் மாநிலத் தலைவர் பதவியை சிவகுமார் ராஜினாமா செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.