sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாற்று கட்சியினரை அவசரப்பட்டு காங்.,கில் சேர்க்காதீர்கள் துணை முதல்வர் சிவகுமாருக்கு சித்தராமையா உத்தரவு

/

மாற்று கட்சியினரை அவசரப்பட்டு காங்.,கில் சேர்க்காதீர்கள் துணை முதல்வர் சிவகுமாருக்கு சித்தராமையா உத்தரவு

மாற்று கட்சியினரை அவசரப்பட்டு காங்.,கில் சேர்க்காதீர்கள் துணை முதல்வர் சிவகுமாருக்கு சித்தராமையா உத்தரவு

மாற்று கட்சியினரை அவசரப்பட்டு காங்.,கில் சேர்க்காதீர்கள் துணை முதல்வர் சிவகுமாருக்கு சித்தராமையா உத்தரவு


ADDED : மார் 20, 2024 01:37 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மாற்று கட்சியினரை அவசரப்பட்டு, காங்கிரசில் சேர்க்காதீர்கள் என்று, துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். 'யாராக இருந்தாலும் லோக்சபா தேர்தலுக்கு பின் பார்த்து கொள்ளலாம்' என்றும், அறிவுரை கூறி இருக்கிறார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்து இருந்தாலும், அவ்வளவு இடங்கள் கிடைப்பது கடினம் என்று, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

சில முக்கிய தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட, காங்கிரசில் வலிமையான ஆட்கள் இல்லை.

இதனால் பா.ஜ., - ம.ஜ.த., கட்சிக்காரர்களை, காங்கிரசுக்கு இழுத்து வந்து, அவர்களை வேட்பாளர்கள் ஆக்கி வெற்றி பெறலாம் என்பது, துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சிவகுமாரின் எண்ணமாக உள்ளது.

இதனால் பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, சிவகுமார் துாண்டில் போட ஆரம்பித்து உள்ளார். ஆனால் யாரும் இன்னும் வலையில் சிக்கவில்லை.

இந்நிலையில் பெங்களூரு வடக்கு தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால், பா.ஜ., மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, பெங்களூரு வடக்கில் போட்டியிட வைக்க வேண்டும் என்று, சிவகுமார் பிளான் வைத்து உள்ளார்.

இதற்காக தட்சிண கன்னடாவின் புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராயும், சதானந்த கவுடாவிடம் பேசி உள்ளார்.

சோமசேகர்


ஒருவேளை சதானந்த கவுடா காங்கிரசில் இணைந்தால், பெங்களூரு வடக்கு அல்லது மைசூரில் போட்டியிட வைக்கலாம் என்பது, சிவகுமாரின் கணக்காக உள்ளது. ஏன் என்றால் சதானந்த கவுடா ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். பெங்களூரு வடக்கு, மைசூரில் ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் அதிகம் உள்ளது.

காங்கிரசுடன் நெருக்கம் காட்டும், யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், அமைச்சராக இருந்த போது, மைசூரு மாவட்ட பொறுப்பு வகித்தார்.

இதனால், சதானந்த கவுடா மைசூரில் போட்டியிட்டால், அவரை வெற்றி பெற வைப்பது எனது பொறுப்பு என்றும், சிவகுமாரிடம் உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சதானந்த கவுடா உட்பட மாற்று கட்சியினரை, அவசரப்பட்டு கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று, துணை முதல்வர் சிவகுமாருக்கு, சித்தராமையா உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'லோக்சபா தேர்தலுக்கு முன்பு, கட்சியில் யாரையும் சேர்க்க வேண்டாம். மாற்று கட்சியில் இருந்து வருபவர்கள், ஆதாயம் இன்றி இங்கு வரமாட்டார்கள். சீட் கேட்பர். நமது கட்சியில், தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.

இதனால் யாராக இருந்தாலும், லோக்சபா தேர்தலுக்கு பின்னர் சேர்த்து கொள்ளலாம். அவர்களின் தகுதியை பார்த்து உரிய பதவி வழங்கலாம்' என்று, சிவகுமாருக்கு, சித்தராமையா அறிவுரை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உஷாரான முதல்வர்


கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் சீட் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார். தேர்தலில் தோற்றாலும் அவருக்கு எம்.எல்.சி., பதவி கொடுத்தனர்.

அவரை வைத்து வடமாவட்டங்களில் லிங்காயத் ஓட்டுகளை அறுவடை செய்ய, காங்கிரஸ் திட்டம் வைத்திருந்தது. ஆனால், காங்கிரசுக்கு ஷாக் கொடுத்துவிட்டு, பா.ஜ.,வுக்கே ஜெகதீஷ் ஷெட்டர் சென்று விட்டார்.

இதனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடும் கோபம் அடைந்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை திட்டி தீர்த்தார்.

'ஒரு கட்சியில் இருந்து, நமது கட்சிக்கு வருபவரின் பின்னணியை பாருங்கள். கட்சிக்கு வருகிறார் என்பதற்காக, அவசரப்பட்டு சேர்க்காதீர்கள்' என்றும், அட்வைஸ் கொடுத்து இருந்தார்.

இதையடுத்து, முதல்வர் சித்தராமையா உஷாரானார். மாற்று கட்சியில் இருப்பவர்களை, காங்கிரசுக்கு அழைத்து வர, ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் மாற்றுக் கட்சிக்காரர்களை இழுக்க, சிவகுமார் துடிப்புடன் செயல்படுகிறார். அவரது வேகத்துக்கு முதல்வர் சித்தராமையா முட்டுக்கட்டை போட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us