தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் காணிக்கை முறைகேடு; விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் காணிக்கை முறைகேடு; விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் காணிக்கை முறைகேடு; விசாரணைக்கு உத்தரவு


UPDATED : ஆக 08, 2026 07:57 PM

ADDED : ஆக 08, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 07:57 PM ADDED : ஆக 08, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவில் சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பெருமளவில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முக்கிய கோவிலாக இது உள்ளது.

இந்நிலையில், கோவிலுக்கு வந்த காணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, சித்தி விநாயகர் கோவில் காணிக்கையில் ஆண்டுதோறும் 18 கோடி வரை நிதி மோசடி நடந்ததாக கூறினார்.இதையடுத்து காணிக்கை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது சில முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதாக கோவில் அறக்கட்டளை தலைவர் சதா சர்வங்கர் விளக்கமளித்தார்.

இதன் அடிப்படையில், கோவில் நிர்வாகத்தில் பணியாற்றிய ஒன்பது ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான கோவில் நிதி பதிவுகள் முழுவதையும் ஆய்வு செய்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us