sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி

/

முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி

முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி

முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி


ADDED : ஜூலை 11, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வராக தொடருவேன். கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை; முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கவும் இல்லை,” என, அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அங்கு கட்சியின் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.

பின், சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை; முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கவும் இல்லை. துணை முதல்வர் சிவகுமாரும், 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்; அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன்' என்று கூறியுள்ளார்.

'கட்சி எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம்' என்று நாங்கள் இருவரும் வாக்குறுதி அளித்துள்ளோம்; அதன்படி செயல்படுவோம்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசியது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மாநில தலைமை மாற்றம் குறித்து விவாதிக்கவில்லை என்று அவரும் தெளிவாக கூறிஉள்ளார்.

முதல்வர் மாற்றம் என்ற செய்தி, ஊடகத்தில் மட்டுமே பேசப்படுகிறது; கட்சி அளவில் நடக்கவில்லை. ராகுலை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன்; இதுவரை கிடைக்கவில்லை.

இதுதவிர, கட்சியில் யாரின் ஆதரவும் எனக்கு தேவையில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us