
பயங்கரவாத தாக்குதலால், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கி டைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . இதற்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? மாநில அந்தஸ்தை மீண்டும் அமல்படுத்தும்படி அனைத்து தொகுதி களுக்கும் வீடுவீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் சமர்ப்பிப்போம்.
ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
அரசு நிறுவனமல்ல!
தேர்தல் கமிஷன், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக இய ங்குகிறது. இது, அரசு நிறுவனமல் ல. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர் பாக மக்களிடையே எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். இது, அவர்களின் பழைய தந்திரம்; குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோதும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி
அடையாளத்தை பாதுகாப்பேன்!
அசாமின் பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடு வேன். அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து பழங்குடியினர் மற்றும் அரசின் 40,000 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுத்துள்ளோம். அசாமியரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் 'லவ் ஜிஹாத்' போல், நில 'ஜிஹாத்' அச்சுறுத்தல் நிலவுகிறது.
ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

