சீக்கியர் படுகொலையில் காங்கிரசுக்கு சிக்கல்! மூத்த தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது கோர்ட்
சீக்கியர் படுகொலையில் காங்கிரசுக்கு சிக்கல்! மூத்த தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது கோர்ட்
ADDED : செப் 13, 2024 04:12 PM

புதுடில்லி: சீக்கியர் படுகொலை சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது டில்லி கோர்ட் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, 1984ம் ஆண்டு டில்லியில் நிகழ்ந்த சீக்கியர் படுகொலை மற்றும் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத் உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சுமத்துவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறும் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளை டில்லி ஐகோர்ட் இன்று பதிவு செய்துள்ளது. வரும் 3ம் தேதி முதல் இந்த வழக்கில் கோர்ட் விசாரணை தொடங்குகிறது.
இந்த வழக்கில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்ற போது அங்கு வந்த ஜெகதீஷ் டைட்லர் அதை தூண்டிவிட்டார் என்பது சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டாகும். கலவரத்தை விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கையிலும் டைட்லரின் பெயர் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

