sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

/

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

2


UPDATED : மார் 01, 2026 09:29 PM

ADDED : மார் 01, 2026 08:23 PM

Google News

2

UPDATED : மார் 01, 2026 09:29 PM ADDED : மார் 01, 2026 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் வாட்ஸ் அப் செயல்படுத்த சிம்பைண்டிங் முறை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனிமேல் ,வாட்ஸ் அப்பில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு, மொபைல்போனில் இல்லாவிட்டால் அச்செயலி செயல்படாது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை கருத்தில் கொண்டு சிம்பைண்டிங் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. மார்ச் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்து இருந்தது.

உலகளவில், வாட்ஸ் அப் நிறுவனமானது ஒரு முறை பரிசோதனை முறையை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி ஓடிபி முறையில் மொபைல் எண்ணை உறுதி செய்த பிறகு,வாட்ஸ் அப் கணக்கு செயல்பட துவங்கும். அந்த மொபைல்போனில் இருந்து சிம்கார்டை அகற்றினாலும், அல்லது மொபைல்போன் மூலம், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப் லாகின் செய்திருந்தாலும் எந்த பிரச்னையும் இருக்காது. வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து செயல்படும்.

தற்போது சிம்பைண்டிங் முறை இதில் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது.இதன்படி வாட்ஸ் அப்பை எந்த மொபைல் எண்ணில் இயக்குகின்றமோ அதன் சிம்கார்டு பயன்படுத்தும் மொபல்போனில் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாட்ஸ் அப் சேவை துண்டிக்க வேண்டும்.கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை தானாக லாக் அவுட் செய்யப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய சிம்கார்டு மூலம் வாட்ஸ் அப் செயலியை ஆக்டிவேட் செய்யும் மோசடியாளர்கள், பிறகு நாட்டிற்கு வெளியே சென்று ரிமோட் மூலம் அதனை இயக்குகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஆக உள்ளது. இனிமேல் மோசடியாளர்களால் அப்படி செயல்பட முடியாது. அவர்களை கண்டுபிடிப்பது எளிது என தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us