sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

/

மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

1


ADDED : ஆக 08, 2024 06:00 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைக்காலம் என்றால், சுற்றுலா பயணியர் குஷி அடைகின்றனர். எங்கெங்கு ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் உள்ளன என, தேடி தேடி ரசிப்பர். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடங்களில் சிம்ஷா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.

மழைக் காலங்களில் நீர் வீழ்ச்சிகளை ரசிப்பது, மனதுக்கு பேரானந்தம் அளிக்கும் என்பது, அனுபவப்பூர்வமான உண்மையாகும். மழைக்காலம் எப்போது வரும் என, காத்திருப்பர்.

மழைக்காலம்


இப்போது தென்மேற்கு பருவ மழைக்காலம், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதால், அணைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. சொர்க்கமே தரையிறங்கியதை போன்று, மனதை கொள்ளை கொள்கிறது.

கர்நாடகாவில், இதுபோன்ற இயற்கை எழில் தாலாட்டும் இடங்களுக்கு பஞ்சமே இல்லை. இவற்றில் சிம்ஷா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். இங்கு மழை பெய்தால் மட்டுமே, சுற்றுலா பயணியர் வருகின்றனர். மற்ற நாட்களில் வருவதல்லை. எனவே இந்த நீர் நீர் வீழ்ச்சி அவ்வளவாக பிரபலம் அடையவில்லை.

மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், ஹலகூரு கிராமம் அருகில் பாயும் சிம்ஷா ஆற்றில் இருந்து, சிம்ஷா நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது. நீர் வீழ்ச்சியின் அழகை காண்பது அரிது.

ஏனென்றால் மழை பெய்தால் மட்டும்தான், இந்த நீர் வீழ்ச்சியின் ஜல நர்த்தனத்தை காண முடியும். தற்போது நீர் வீழ்ச்சி நளினமாக நர்த்தனமாடுகிறது.

இந்த அழகை காண தொலைவில் உள்ள நகர்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.

சிம்ஷா நீர் வீழ்ச்சி உள்ள இடம், கரும்பாறைகளால் சூழப்பட்டதாகும். சிம்ஷா ஆற்றில் ஆண்டின் அனைத்து நாட்களிலும், தண்ணீர் பாய்வதில்லை. அதிகமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நீர் பாய்ந்து வரும்.

கரும்பாறைகள்


அப்போது நீர்வீழ்ச்சி களை கட்டும். அப்போது சென்றால் கரும்பாறைகள் மீது, பால் நுரையாக பொங்கி பாயும் அற்புதமான காட்சியை காணலாம்.

நீர் வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட பெயர் இல்லை. மக்கள் தங்களுக்கு விருப்பமான பெயரில் அழைக்கின்றனர். மாண்டியாவின் நயாகரா என, பிரசித்தி பெற்றுள்ளது.

ஆனால் நீர் வீழ்ச்சியை பார்க்க செல்வது, அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் இங்கு செல்ல சரியான ரோடு வசதி இல்லை. இதனால் ஹலகூரில் அற்புதமான நீர் வீழ்ச்சி இருப்பதே, பலருக்கும் தெரிவது இல்லை.

காட்டுப்பாதையில் நடந்து சென்று, நீர் வீழ்ச்சியை காண வேண்டும். ஒரு முறை இதை கண்டால், கண்களை எடுக்கவே முடியாது. 100 அடி உயரத்தில் இருந்து கீழே பாயும் தண்ணீர், அதன்பின் சிறு, சிறு நீர் வீழ்ச்சிகளாக பிரிந்து, வளைந்து, நெளிந்து பாயும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், மழைக்காலத்தில் சிம்ஷா நீர் வீழ்ச்சியை காண தவறுவது இல்லை.

எப்படி செல்வது?

மலவள்ளியின், ஹலகூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது. இதை காண விரும்பும் சுற்றுலா பயணியர், ஹலகூரில் இருந்து, முத்தத்திக்கு செல்லும் பாதை வழியாக, ஐந்து கி.மீ., தொலைவு செல்ல வேண்டும். அங்கு ரோடு இரண்டாக பிரியும்.

வலது புறம் திரும்பி பீரோடா கிராமத்தை நோக்கி செல்லும் பாதையில் சென்றால், கரலகட்டே, காணாலு, கெஞ்சபோவிதொட்டி கிராமத்தை அடையலாம். இங்கிருந்து 200 மீட்டர் தொலைவு சென்றால், சிம்ஷா நீர் வீழ்ச்சியை அடையலாம்.

முதன் முறையாக இங்கு செல்லும் சுற்றுலா பயணியர், உள்ளூர் வழிகாட்டியை உடன் அழைத்து செல்வது நல்லது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us