தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பார்க்கிங் பிரச்னையால் விபரீதம்; சிங்கப்பூரில் இருந்து வந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பார்க்கிங் பிரச்னையால் விபரீதம்; சிங்கப்பூரில் இருந்து வந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பார்க்கிங் பிரச்னையால் விபரீதம்; சிங்கப்பூரில் இருந்து வந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை


ADDED : நவ 07, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகர்: ஹரியானாவின் பரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் பரமஜித் தன்கர். இவர், சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், தனது கார் நிறுத்தும் பகுதியில், அமோகன் எலியாஸ் மோனு சர்மா என்பவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதை எடுக்குமாறு பரமஜித் கூறிய போது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த மோனு சர்மா, தனது துப்பாக்கியால் சுட்டதில், 9 குண்டுகள் பரமஜித் மீது பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோனு சர்மா தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். ஏற்கனவே, நாய் வாக்கிங் அழைத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வந்தது.

பரமஜித் தன்கர், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆசியப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது வியட்நாம் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us