
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு: வேட்பாளர் கிடைக்காமல், காங்கிரஸ் பரிதவிக்கும் துமகூரு லோக்சபா தேர்தலில், எம்.எல்.ஏ., சீனிவாசின் மனைவியின் பெயர் அடிபடுகிறது.
துமகூரு தொகுதியில் காங்கிரசில் போட்டியிட தகுந்த வேட்பாளர் இல்லை. இதற்கு முன், காங்கிரசில் இருந்த முத்த ஹனுமேகவுடா, பா.ஜ.,வுக்கு சென்று விட்டார். துமகூரின் முன்னாள் எம்.பி.,யான இவர், 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் பசவராஜ் வேட்பாளர் ஆக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இவரை காங்கிரசுக்கு அழைத்து வர முயற்சி நடக்கிறது.
இதற்கிடையில் துமகூரு, குப்பி எம்.எல்.ஏ., சீனிவாசின் மனைவி பாரதி பெயர் அடிபடுகிறது. கட்சி மேலிடம் உத்தரவிட்டால், தன் மனைவியை களமிறக்க தயாராக இருப்பதாக, சீனிவாஸ் அறிவித்துள்ளார்.