தேவகவுடாவை விட்டு கட்சியினர் ஓடுவது போலவும், எடியூரப்பாவுக்கு எதிராக சிலர் கலக குரல் எழுப்புவது போலவும் கார்ட்டூன் வேண்டும் சார்...
தேவகவுடாவை விட்டு கட்சியினர் ஓடுவது போலவும், எடியூரப்பாவுக்கு எதிராக சிலர் கலக குரல் எழுப்புவது போலவும் கார்ட்டூன் வேண்டும் சார்...
ADDED : ஏப் 21, 2024 06:22 AM

பெங்களூரு:
கட்சி தாவல், கோஷ்டி பூசல் தேவகவுடா, எடியூரப்பா தவிப்பு
கர்நாடகாவின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர், தங்கள் கட்சியில் நடக்கும் கட்சி தாவல், கோஷ்டி பூசலால் பரிதவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ம.ஜ.த., கட்சி 20 ஆண்டுகளாக தேய்ந்து வருகிறது. கடந்த 2004ல், 58 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள் கொண்ட கட்சியில், தற்போது 19 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி., மட்டுமே உள்ளனர்.
காரணம் என்ன?
கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் ம.ஜ.த., ஓட்டுகளை, காங்கிரஸ் பக்கம் திருப்புவதில் சிவகுமார் வெற்றி பெற்றார். இது, தேவகவுடாவை மிகவும் பாதித்து வருகிறது. பழைய மைசூரு பகுதியில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், மாநில அரசியலில் ம.ஜ.த.,வின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதை உணர்ந்த தேவகவுடா, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டார். மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால், மத்திய அரசில், குமாரசாமிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.
தேவகவுடாவின் குடும்பம் அரசியல் ரீதியாக வீழ்ச்சி அடையும் போதெல்லாம், ஒக்கலிக சமூகத்தினர், அவரை காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ம.ஜ.த.,வின் கூடாரம் காலியாகி கொண்டே வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் முக்கியமானவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.
தேவகவுடாவுக்கு சிவகுமார் சவாலாக உள்ளார் என்றால், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பா.ஜ., உள்ளேயே கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இவரது மகன் விஜயேந்திரா, மாநில தலைவராக நியமிக்கப்பட்ட போதே, கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கரடி சங்கண்ணா
பசனகவுடா பாட்டீல் எத்னால், ரவி, நளின்குமார் கட்டீல், ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா உட்பட பல மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த அதிருப்தி இன்னும் நீங்கவில்லை.
கரடி சங்கண்ணா, மாதுசாமி, சந்திரப்பா, மாலிகய்யா குத்தேதார், ஈஸ்வரப்பா மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த கரடி சங்கண்ணா, குத்தேதார் ஆகியோர் காங்கிரசில் இணைந்துள்ளனர்.
துமகூரை சேர்ந்த மாதுசாமி, கட்சி வேட்பாளர் சோமண்ணாவை ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்து வருகிறார்.
கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி, எடியூரப்பாவின் குடும்பத்தின் மீது திரும்பி உள்ளது. ஷிவமொகாவில் ராகவேந்திராவை எதிர்த்து, ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
எதிரியை சமாளிப்பதை விட, கோஷ்டி பூசலை சமாளிக்கவே எடியூரப்பாவுக்கு நேரம் போதவில்லை. கர்நாடகாவில் ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தேவகவுடாவின் செல்வாக்கும், எடியூரப்பாவின் செல்வாக்கும் நிலைத்திருக்கும்.
இல்லையெனில், பழைய மைசூரு பகுதியை ம.ஜ.த., இழந்து விடும். மாநில பா.ஜ.,வில் எடியூரப்பா குடும்பத்தின் பிடி தளரும்.

