ADDED : பிப் 09, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரில் உள்ள முனியப்பா வீட்டில், தலித் சமூக அமைச்சர்கள் மஹாதேவப்பா, பரமேஸ்வர், எஸ்.டி., சமூக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் உள்ள 5 எஸ்.சி., இரண்டு எஸ்.டி., தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்து விவாதித்து உள்ளனர். இந்த தொகுதிகளில் நாம் கை கட்டும் நபரை தான், வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமாரிடம் வலியுறுத்த முடிவு எடுத்து உள்ளனர்.
இதற்கிடையில், அமைச்சர்களை போட்டியிட வைக்க, துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்து வருகிறார். சித்தராமையா ஆதரவு அமைச்சர்களை, லோக்சபா தேர்தலில் போட்டியிட வைத்து, தேசிய அரசியலுக்கு அனுப்பி வைத்துவிட்டதால், எளிதாக முதல்வர் பதவியை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு உள்ளார்.

