ADDED : அக் 27, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனந்தபூர்: ஆந்திராவில் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திராவின் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த சிலர், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நேற்று பிற்பகலில், சிங்கனமலா மண்டல் அருகே வந்தபோது காரின் டயர் திடீரென பஞ்சரானது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரி மீது மோதி, அதன் அடியில் சிக்கியது.
இதில் காரில் இருந்த சந்தோஷ், சண்முகம், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா, வெங்கட் ஆகிய ஆறு பேரும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அப்பகுதி போலீசார் ஆறு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.