ADDED : ஜூன் 06, 2025 12:13 AM
நாசிக்: மஹாராஷ்டிராவில், சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள சதானா பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், நாசிக்கில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் காரில் சொந்த ஊர் திரும்பினர்.
கல்வான் அருகேயுள்ள கோல்ஹாபூர் பாடா பகுதியில் வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதியது.
இதில் கார் டிரைவர் காலிக் மெக்மூத் பதான், 50, மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷாய்லா வசந்த் பதான், 62, அவரது மகள் மாதவி மேட்கர், 32, பேத்தி திரிவேணி மேட்கர், 4, அவர்களது உறவினர் சர்ளா பால்சந்திர பதான், 50, ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்தில் இறந்தனர்.
மாதவியின் 12 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பால்சந்தர் பதான் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகிறார்.