மஹாராஷ்டிராவில் வெளுத்து வாங்கும் மழை ஆறு பேர் பலி; பஸ் - ரயில் சேவை பாதிப்பு
மஹாராஷ்டிராவில் வெளுத்து வாங்கும் மழை ஆறு பேர் பலி; பஸ் - ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஆக 20, 2025 03:11 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் இடைவிடாது கொட்டி வரும் கனமழைக்கு ஆறு பேர் பலியாகினர். பஸ், ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது.
வெள்ளப்பெருக்கு மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, நான்டேட் உட்பட பல்வேறு பகுதிகளி ல் கொட்டி வரும் மழையால், சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இடைவிடாமல் பெய்யும் மழையால், மிதி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளி ல் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ள்ளது.
மும்பையின் பல இடங்களில் 24 மணி நேரத்தில், 20 செ.மீ., மழை பதிவானது. விக்ரோலியில் மட்டும் அதிகபட்சமாக 25 செ.மீ., மழை பதிவானது.
இதனால், மும்பையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை போக்குவரத்து முடங்கியது. ஆறுகளில் பெருக் கெடுத்த வெள்ளம் காரணமாக, இருப்புப் பாதைகள் நீரில் மூழ்கின.
இதனால், புறநகர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. துறைமுக வழித்தடத்தில், பல இடங்களில் இருப்புப் பாதைகள் நீரில் மூழ்கியதால், அந்த தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால், விமான சேவை முடங்கியது. வெளியூர்களில் இருந்து வந்த விமானங்கள், அருகில் உள்ள பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
விடுமுறை மிதி ஆற்றங்கரையை ஒட்டிய குர்லா பகுதிகளில் வசித்த 300க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மும்பையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நீ திமன்றமும் அரை நாள் மட்டு மே இயங்கியது.
தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
மழை, வெள்ளம் காரணமாக, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என, மும்பை மாநாகராட்சி கேட்டுக்கொண்டது.
பால்கர், தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் கட்டுப் பாட்டு அறைகளுக்கு சென்று வெள்ள நிலைமையை கேட்டறிந்தனர்.
'ரெட் அலெர்ட்' மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கொட்டி வரும் கனமழைக்கு, மாநிலம் முழுதும் இதுவரை ஆறு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்டேட் மாவட்டத்தின் முஜ்கெத் - உத்கிர் சாலையில் சென்ற ஆட்டோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில், ஏழு பேர் சென்ற நிலையில், மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மஹாராஷ்டிராவில், மேலும் இரு தினங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, பால்கர், ராய்காட், தானே, ரத்னகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.