UPDATED : ஏப் 11, 2025 03:04 PM
ADDED : ஏப் 11, 2025 01:04 PM

லக்னோ: கோர்ட்டுக்கு ஒழுங்கீனமாக வந்த வக்கீல் ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்தியாவில் பிரபலமான தீர்ப்புகளை தந்துள்ளது அலகாபாத் ஐகோர்ட். இந்த கோர்ட்டில் வரும் தீர்ப்புகள் எப்போதும் வித்தியாசமாக இருப்பதுடன், இங்கு வழங்கப்படும் தீர்ப்புகள் பிரபலமாக பேசப்படும். குறிப்பாக அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புகள் பல கோர்ட்டுகளில் முன்னுதாரணமாக வாதத்தில் எடுத்து வைக்கப்படும்.
இந்நிலையில் இந்த அலகாபாத் கோர்ட்டில் அசோக்பாண்டே என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கிற்காக ஆஜரானார். இந்நேரத்தில் இவர் கறுப்பு நிற கோர்ட்டில் அணியும் வெள்ளை பாண்ட் இல்லாமல் வந்துள்ளார். மேலும் சட்டைகளின் பட்டனையும் சரியாக பொருத்தவில்லை. இது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி கேட்டதும், அவர் கொஞ்சமும் மதிப்பில்லாமல் ' நீதிபதியை நீங்களும் ரவுடிகள் குண்டர்கள் தானே ' என்று கூறியுள்ளார். இதனால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை மறுநாள் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக விசாரித்தது. வக்கீல் அசோக்பாண்டேவுக்கு 6 மாத சிறையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பு தற்போது அலகாபாத் ஐகோர்ட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

