ADDED : ஜன 30, 2025 02:14 AM
இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், 6 ராக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடியின
இதில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த மாநிலத்தில் அடிக்கடி ஆயுதக்குவியல் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சுராசந்த்பூரில் உள்ள ஹெங்க்லாப் பகுதியைச் சேர்ந்த லோய்லாம்காட் மற்றும் நலோன் கிராமப் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய அதிரடி சோதனையில், 6 ராக்கெட்கள் மற்றும் அதை ஏவும் லாஞ்சர், நாட்டு பீரங்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த இருவர் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோரோக் இங்கோல் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இம்பால் நகரில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வணிகர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.