sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மங்களூரில் 'ஸ்கை டைனிங்' துவக்கம் காற்றில் மிதந்தபடி சாப்பிட வாய்ப்பு

/

மங்களூரில் 'ஸ்கை டைனிங்' துவக்கம் காற்றில் மிதந்தபடி சாப்பிட வாய்ப்பு

மங்களூரில் 'ஸ்கை டைனிங்' துவக்கம் காற்றில் மிதந்தபடி சாப்பிட வாய்ப்பு

மங்களூரில் 'ஸ்கை டைனிங்' துவக்கம் காற்றில் மிதந்தபடி சாப்பிட வாய்ப்பு


ADDED : டிச 01, 2024 11:10 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: காற்றில் மிதந்தபடி, மேகங்களுக்கு இடையே குடும்பத்துடன் சாப்பிட சிங்கப்பூருக்கோ, துபாய்க்கோ செல்ல வேண்டியதில்லை. மங்களூரிலேயே, 'ஸ்கை டைனிங்' துவங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில், 'ஸ்கை டைனிங்' வசதி இருக்கும். உயரமான இடத்தில் காற்றில் மிதந்தபடி பிடித்தமானவர்களுடன் உணவருந்தலாம். இது புதிய அனுபவமாக இருக்கும். இது போன்ற ஸ்கை டைனிங் வசதி, தட்சிண கன்னடா மங்களூரில் துவங்கப்பட்டுள்ளது.

மங்களூரின் மரவந்தே கடற்கரையில், 'ஸ்கை டைனிங்' துவங்கப்பட்டுள்ளது. சவுபர்ணிகா ஆறு மற்றும் அரபிக்கடலின் தோற்றத்தை ரசித்தபடியே உணவருந்தலாம். ஆகாயத்தில் 50 அடி உயரத்தில் 360 டிகிரி சுற்றும் இருக்கையில் அமர்ந்து காற்றில் மிதந்தபடி உணவருந்தலாம். நவம்பர் 29ம் தேதியன்று, ஸ்கை டைனிங் ஆரம்பமானது.

மங்களூரின் பனம்பூர் அருகில் ஏற்கனவே ஸ்கை டைனிங் துவங்கப்பட்டது; தற்போது மரவந்தியில் துவக்கப்பட்டது, மாநிலத்தின் இரண்டாவது ஸ்கை டைனிங் ஆகும். 90 முதல் 100 அடி உயரத்தில் பறந்தபடி, ஸ்கை டைனிங்கில் உணவருந்த ஒருவருக்கு, உணவுக்கான பில் தவிர, தலா 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us